வீட்டின் லட்சுமி கடாட்சமும், மகிழ்ச்சியும் தங்கியிருக்கும் மிக முக்கியமான இடமாக சமையலறை கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறை என்பது வெறும் உணவு சமைக்கும் இடம் மட்டுமல்ல; அது வீட்டின் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் முதன்மை மையமாகும். உணவை வழங்கும் அன்னபூரணி தேவியின் அருளும், பஞ்சபூதங்களில் ஒன்றான சக்தி வாய்ந்த அக்னி பகவானின் ஆற்றலும் நிறைந்திருக்கும் இந்த இடத்தைப் பராமரிக்கும் முறையில் தான் வீட்டின் நன்மைகள் அடங்கியுள்ளன.

காலை பொழுதை நேர்மறையான ஆற்றலுடன் தொடங்குவது வீட்டின் செழிப்பிற்கு மிகவும் அவசியமாகும். வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, காலையில் சமையல் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக சமையலறையைச் சரியாகச் சுத்தம் செய்வது வீட்டின் வறுமையைப் போக்கி சுபிட்சத்தைக் கொண்டுவரும். ஆனால், பெரும்பாலானோர் சமையலறையைச் சுத்தம் செய்யும்போது ஒரு சரியான வரிசையைப் பின்பற்றுவதில்லை; இதுவே அறியாமல் செய்யும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கிறது.

சமையலறையைச் சுத்தம் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட முறையை வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதன்படி, காலையில் சமையலைத் தொடங்குவதற்கு முன் முதன்முதலாக அக்னி பகவான் உறையும் ‘கேஸ் அடுப்பை’  தான் சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு சமையல் மேடையை (Slab) துடைக்க வேண்டும். இந்த இரண்டையும் முடித்த பின்னரே இறுதியாகப் பாத்திரங்களைக் கழுவும் ‘சிங்க்’  பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த முறையான வரிசையைப் பின்பற்றிச் சுத்தம் செய்வதன் மூலம் சமையலறையில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, அன்னபூரணி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். தவறான வழியில் சுத்தம் செய்வதோ அல்லது அழுக்கு நிறைந்த சமையலறையில் சமையலைத் தொடங்குவதோ குடும்பத்தில் தேவையற்ற கஷ்டங்களையும், பணத் தட்டாட்டத்தையும் உண்டாக்கும் என்பதால், இந்த எளிய வாஸ்து விதியைத் தினமும் பின்பற்றி வீட்டில் நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் பெருகச் செய்யுங்கள்.