இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அப்படி வீட்டில் இருக்கும் நாய் மற்றும் பூனைகள் ஏதாவது வீட்டில் சண்டை நடந்தால் அல்லது நாம் பேசிக் கொண்டு இருக்கும்போது அதனை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அடி விழுந்தால் கூட நாய் மற்றும் பூனைகள் அந்த பக்கம் கூட வராது. அதன்படி பக்கத்து வீட்டில் பெண்களுக்கு இடையே சண்டை ஒன்று நடைபெறும் நிலையில் அந்த காட்சியை ஜன்னலில் உரிமையாளருடன் வண் சாப்பிட்டுக்கொண்டு நாய் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.