இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அதிகம் இல்லாத காரணத்தினால் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் தவிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதனால் ஏற்படும் உடல்நல கோளாறுகளும் அதிகமாகிவிட்டது அது மட்டும் இல்லாமல் இளம் வயதினரும் கணினியிலும் கைபேசியிலும் அதிக நேரத்தை செலவிடுவதால் உடல் எடை அதிகரிப்பிற்கு ஆளாகின்றனர்.

இதையடுத்து உடல் எடை குறைப்பது எப்படி என்று ஏராளமானோர் இணையத்தில் தேடவும் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும் ப்ரோக்கோலி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்த ப்ரோக்கோலி உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.

ப்ரோக்கோலி காபி

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி பொடி – 2 ஸ்பூன்

(புரோக்கோலியை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது துருவியோ வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம்)

பால் – 1 கப்

காபி பொடி – 1/2 ஸ்பூன்

செய்முறை

ஒரு கப் பாலை நன்றாக காய்த்து அதனுடன் அரை ஸ்பூன் காபி பொடி இரண்டு ஸ்பூன் புரோக்கோலி போடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.