சூன் 16 கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.

632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார்.

1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.

1586 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.

1654 – சுவீடனின் கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.

1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.

1773 – வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.[1][2]

1779 – எசுப்பானியா பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. ஜிப்ரால்ட்டர் மீதான போர் ஆரம்பமானது.

1819 – குசராத்து மாநிலம், கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.[3]

1846 – ஒன்பதாம் பயசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த திருத்தந்தை ஆவார்.

1883 – இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

1897 – அவாய் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.

1903 – போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1903 – ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.

1911 – ஐபிஎம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.

1911 – 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.

1922 – அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்திடம்பெற்ற பொதுத்தேர்தலில் சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.

1944 – ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.

1948 – மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

1955 – அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1958 – 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1963 – வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1976 – தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997 – அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

2010 – பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.

2012 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.

2012 – சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.

2013 – வட இந்திய மாநிலமான உத்தராகண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

இன்றைய தின பிறப்புகள்

1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. 1790)

1829 – யெரொனீமோ, அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. 1909)

1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)

1891 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1952)

1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1974)

1896 – கோட்டா ராமசுவாமி, இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. 1990)

1902 – ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன், அமெரிக்கத் தொல்லியலாளர் (இ. 1984)

1902 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1992)

1917 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (இ. 2001)

1921 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (இ. 2001)

1924 – டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1978)

1930 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. 2016)

1934 – குமாரி கமலா, தென்னிந்திய நடிகையும், பரதநாட்டியக் கலைஞர், பாடகி

1937 – எரிக் செகல், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2010)

1940 – என். சந்தோசு எக்டே, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி

1950 – மிதுன் சக்கரவர்த்தி, இந்திய நடிகர், அரசியல்வாதி

1958 – அபு சயாப் ஆத்திரேலிய போர்வீரர், இசைக்கலைஞர்

1971 – டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக்கலைஞர், தயாரிப்பாளர் (இ. 1996)

1986 – அஞ்சலி, தென்னிந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

1925 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1870)

1940 – யோசப் மைசிட்டர், லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. 1876)

1944 – பிரபுல்ல சந்திரராய், வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், சமூக சேவையாளர் (பி. 1861)

1977 – வெர்னர் வான் பிரவுன், செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1912)

2015 – சார்லசு கோர்ரியா, இந்தியக் கட்டிடக்கலைஞர் (பி. 1930)

2016 – எலன் ஜோ காக்சு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1974)

2017 – எல்முட் கோல், செருமனியின் 6வது அரசுத்தலைவர் (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்

தந்தையர் தினம் (சீசெல்சு)

பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்