சாம்சங் இந்த கிரீன் லைன் (Green line) பிரச்சினை உள்ள சில கேலக்ஸி S சீரிஸ் போன்களுக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது. கேலக்ஸி S20 சீரிஸ், கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முறை இலவசமாக ஸ்கிரீனை மாற்றித் தருவதாக சாம்சங் கூறியுள்ளளது.

சமீப காலமாக இந்த கிறீன் கோடுகள் பிரச்னை எழுந்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. அதாவது, மொபைல் வாங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மொபைல் ஃபோன் ஏதேனும் சேதமடைந்திருந்தால் மாற்றிக்கொடுக்கப்பட மாட்டாது. வரும் 30ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.