ஒரு மனிதர் இந்த உலகில் உயிர் வாழ உணவு மற்றும் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் தேவை என்பது அதிகமாகவே உள்ளது. சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது இடையில் ஒரு கிலோவுக்கு 40 மில்லி லிட்டர் வரை தினமும் தண்ணீர் அருந்துவது அவசியம்.

அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மில்லி லிட்டராக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவர் கோடை காலத்தில் 3.6 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும். தண்ணீருடன் சேர்த்து இளநீர், மோர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.