இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே இயந்திர மயமாகியதோடு தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களில் ஒன்றுதான் குளிர்சாதன பெட்டி. காய்கறிகள் , பழங்கள், உணவுகள் கெட்டுப்போகாமல் வைப்பதற்கு இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டியை சிறிது நேரம் அணைத்து வைப்பதால் மின்கட்டணம் குறையுமா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது. குளிர்சாதன பெட்டி பொதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடியதாக தயாரிக்கப்படுகிறது.

இதனை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அணைத்து வைத்தால் அதன் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு உணவும் கெட்டுப் போய்விடும். எனவே குளிர்சாதன பெட்டி 24 மணி நேரமும் இயங்குவது தான் சரியானதாக இருக்கும்.  ஒரு மணி நேரம் ஆப் செய்துவிட்டு பிறகு ஆன் செய்யும்பொழுது கம்ப்ரசர் குளிர்சாதன பெட்டியை அதே வெப்ப நிலையில் மீண்டும் குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும்.

மேலும் அதை செய்வதற்கு இன்னும் அதிக மின்சாரம் செலவழியும். வெளியூர் பயணம் எங்காவது செல்ல விரும்பினால் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு அணைத்து வையுங்கள். மாறாக ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் அணைத்து வைப்பது மட்டுமே சிறந்த தேர்வாக இருக்காது.