சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிப்பதால், நாளை தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. ஆதலால் மக்களை ஈர்க்க நகைக்கடைகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன.