உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு அண்டை நாடான நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள் தான். கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 81.19 சதவீதம் இந்துக்கள் நேபாளத்தில் உள்ளனர். ஆனால் கடந்த 2006-ம் ஆண்டு நேபாளம் ஒரு மத சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலகின் இந்துக்கள் அதிகம் வசிக்கும் 3-வது நாடு பற்றி தற்போது பார்க்கலாம்.

அதாவது மொரிசியஸ் நாட்டில் தான் 3-வதாக இந்துக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 48.5% பேர் இந்துக்கள் உள்ளனர். இது தற்போது 51% எட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி புரியும் போது மொரிஷியஸ் நாட்டுக்கு ஏராளமான இந்துக்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டனர். அதன் பிறகு தான் அங்கு இந்து மதம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்த நாட்டுக்கு அடுத்ததாக பிஜியில் 27.9% இந்துக்களும், கயானாவில் 23.3% இந்துக்களும், பூடானில் 22.2% இந்துக்களும், டொபோக்காவில் 18.2% இந்துக்களும், கத்தாரில் 15.1 சதவீதம் இந்துக்களும், இலங்கையில் 12.6 சதவீதம் இந்துக்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.