இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான பயணிகள் அதில் பயணம் செய்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு புல்லட் ரயிலில் மட்டும் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த ரயில் டாக்டர் எல்லோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இது ஒரு சோதனை ரயிலாகும். அதாவது இந்த ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்து அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை எச்சரிக்கும். இந்த ரயில் மணிக்கு 443 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், மொத்தம் 9 பணியாளர்கள் ரயிலில் இருப்பார்கள். மேலும் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதால் மஞ்சள் புல்லட் ரயில் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இதனால்தான் இந்த ரயிலில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.