நெதர்லாந்தை சேர்ந்த 57 வயதான பெர்ட் ஜான்சன், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கிண்ண சாதனையை படைத்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இவருடைய இதயம் அவரது உறுப்புகளுக்கு ரத்தத்தை சரியாக வழங்காத இதயத் தசை பிரச்சனையால் ஆறு மாதங்களுக்கு மேல் வாழ மாட்டார் என மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர். அதே சமயம் சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இதயம் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்றளவும் உயிருடன் வாழ்ந்து வருகின்றார்.