ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம் சென்று விட்டார். அவர் மைதானத்திலிருந்து வெளியே செல்லும்போது வழியில் நின்று கொண்டிருந்த ஆர்சிபி பணியாளர்களுக்கு மட்டும் கை கொடுத்து விட்டு சோகத்துடன் சென்றார்.
அதாவது ஆர்சிபி வீரர்கள் நீண்ட நேரம் வெற்றியை கொண்டிய நிலையில் எம்.எஸ் தோனிக்கு திடீரென சிறிய உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இதனால்தான் அவர் அங்கிருந்து உடனடியாக சென்றார். இருப்பினும் வெளியே வந்த பிறகு அவர் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுத்தார். இந்நிலையில் எம்.எஸ் தோனி கை கொடுக்காமல் சென்ற நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு விராட் கோலி கை கொடுத்தார். அதோடு எம்.எஸ் தோனியை அங்கு காணாததால் உடனடியாக அவரைத் தேடி டிரஸ்ஸிங் ரூம் சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
Dhoni didn’t come on ground for handshake
Then kohli goes in the csk camp to meet him 👀 pic.twitter.com/FkEfHhJzrD— Vir8 (@wronggfooted) May 19, 2024
