திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த இளைஞர், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தது, கேடிசி சோதனை சாவடி எதிரிலுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனை முன்பாக ஆகும்.

மரணமடைந்த கவின், தனது உறவினர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்ததாக தெரிகிறது. அங்கு மருத்துவமனைக்கு  வந்திருந்த ஒருவர், மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்று சாலையில் வெட்டி கொலை செய்துள்ளார். இந்தக் கொலைக்கு காரணம் என்ன? யார் இந்த மர்ம நபர்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில், இருசக்கர வாகனத்தில் கவின்-ஐ   அழைத்து வந்த நபரின் வீடியோ பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது  விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகைய கொலை நடப்பது முக்கிய மருத்துவமனை முன்பாக என்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.