கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் விஷ்ணு (29) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 65 வயது மூதாட்டிக்கு அவ்வப்போது உதவிகள் செய்வது வழக்கம். இந்த மூதாட்டியின் வீட்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி இருந்துள்ளார். இந்த சிறுமி மூதாட்டியின் பேத்தியாவார்.
மூதாட்டிக்கு உதவி செய்யும்போது சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் பழகி வந்தனர். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்ட நிலையில் இது பற்றி அவர் தன் பாட்டியிடம் கூற அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அந்த சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சிறுமியிடம் விசாரித்த போது கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் திருமண ஆசை காட்டி கிட்டத்தட்ட மூன்று முறை விஷ்ணு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார். இது தொடர்பாக மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
