புவியீர்ப்பு விசை அற்ற விண்வெளியில் யோகா பயிற்சி செய்ய முடியுமா என்ற ஆச்சரியக் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி அவர் ‘யின் யோகா’ செய்யும் காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. பூமியில் யோகா பாயைப் பயன்படுத்தி எளிதாகப் பயிற்சிகளைச் செய்துவிட முடியும். ஆனால், விண்வெளியில் மிதக்கும் சூழல் நிலவுவதால், விண்வெளி நிலையத்தின் சுவர்கள் மற்றும் உபகரணங்களின் ஆதாரத்தைக் கொண்டே யோகா உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.

குறிப்பாக, புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் உடலை ஒரே நிலையில் சமநிலைப்படுத்தி நிலைநிறுத்த, அடிவயிறு மற்றும் மையத் தசைகளின் அதிக அளவிலான வலிமை தேவைப்படுகிறது. உடலை மெதுவாக நீட்டிச் செய்யும் ‘யின் யோகா’ முறையானது, விண்வெளிப் பயணத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் சோர்வைப்போக்க பெரிதும் உதவுகிறது. தனது தீவிரப் பணிகளுக்கு நடுவே தினமும் மாலையில் 30 நிமிடங்கள் இந்த யோகாவைப் பயிற்சி செய்வது மனதிற்கும் உடலிற்கும் ஆழ்ந்த அமைதியைத் தருவதாகச் சோஃபி குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sophie Adenot (@soph_astro)

“>

அறிவியலும் கலையும் ஒருங்கிணைந்த இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இது ஏதோ ஒரு மாயாஜாலம் போலக் காட்சி அளிப்பதாக வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் உடலை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது குறித்து விளக்கும் மற்றொரு விரிவான வீடியோவை விரைவில் வெளியிடப்போவதாகவும் சோஃபி தெரிவித்துள்ளார்.