சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் 15,338 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.