சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க வளையலை மர்மப் பெண் ஒருவர் லாவகமாகத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் துணிகளைப் பார்ப்பது போலச் சுற்றித் திரிந்த அந்தப் பெண், அருகில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் கவனத்தைத் திசைதிருப்பி வளையலைத் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், துணிக்கடைகளுக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

“>

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து அந்தப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.