“எதிர்க்கட்சிக்காரங்க பண்ற விவாதங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காம, நேரா களத்துல இறங்கி மக்களோட தேவைகளை கவனிங்கப்பா!” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் படையான ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors) குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சியின் கொள்கைகளையும், அதன் எதிர்காலத் திட்டங்களையும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இக்குழுவினர் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் வைக்கும் வீணான விமர்சனங்களுக்கும், அரசியல் விவாதங்களுக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதை விட, அடிமட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதற்குக் களப்பணியாற்றித் தீர்வு காண்பதே தங்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனத் தலைமை சார்பில் இவர்களுக்கு மிகக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீணான அரசியல் மோதல்களைத் தவிர்த்து, மக்கள் நலப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவெக-வின் இந்த புதிய இராஜதந்திர நகர்வு, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
