உத்தரபிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில், பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடந்த மரணப் போர் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பொதுமக்கள் வாகனங்களை நடு சாலையிலேயே நிறுத்தி, உயிருக்கு ஆபத்தான அந்த சந்திப்பை நேரில் பார்த்த அதிர்ச்சியையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
வீடியோவில், கறுப்பு நாகப்பாம்பு தனது தலைநீட்டிய நிலையில் களத்தில் தயாராகக் காணப்படுகிறது. மறுமுனையில், பயமே இல்லாமல் கீரிப்பிள்ளை எட்டி வந்து அதனை தாக்க முயற்சி செய்கிற காட்சிகள் பதிவாகியுள்ளன. பாம்பு தாக்க முயற்சி செய்தாலும், கீரிப்பிள்ளையன் அதிவேகக் குழப்பும் அசைவுகளால் அதைப் பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு கீரிப்பிள்ளை நேராக நாகத்தின் தலை மீது கடுமையாக தாக்கி அதனை தரையில் இழுத்து சாலையோர வயலில் தள்ளிச் செல்கிறது.
பொதுவாக, பாம்பு மற்றும் கீரிப்பிள்ளை இடையே சண்டை நடந்தால் பெரும்பாலும் கீரிப்பிள்ளையே வெற்றி பெறும். அதற்குக் காரணம் அதனது வேகம், துல்லியமான எதிர்வினை மற்றும் முக்கியமாக, பாம்பு விஷத்திற்கு இயற்கையான எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பது. கீரிப்பிள்ளை ஒரு நொடியிலே நான்கு முறை தாக்கும் திறன் கொண்டிருப்பதால், நாகம் போலி தாக்கங்கள் போட நேரமில்லாமல் வீழ்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர்களுக்கு வேற வேலையே இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினர். ஒருவர் கிண்டலாக, “இவங்க தான் 24 மணி நேரத்தில 30 மணி நேரம் இருக்குறவங்க! ஆரையா மக்கள் வீடியோ எடுக்க ஆரம்பிச்சாச்சு!” என பதிவிட்டுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,
सड़क पर ब्लैक कोबरा व नेवले की फाइट देख ठहर गया आवागमन
कोबरा और नेवले की फाइट का वीडियो सोशल मीडिया पर वायरल#Wildlife #SnakeVsMongoose #ViralVideo #AuraiyaNews pic.twitter.com/RwJmIQ9upB
— News1India (@News1IndiaTweet) July 17, 2025
