தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி தீபா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபா நேற்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இது குறித்து  தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.