நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு தார்ப்பாயை அவிழ்த்து கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் ராசுவின் கை பட்டது.

இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் ராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.