தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் தீவிரப் போராட்டங்களும் கொந்தளிப்பான சூழலும் நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் எக்ஸ்  வலைதளத்தில் மீண்டும் சூட பிடித்துள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கடந்த காலத்தில் நீட் தேர்வு குறித்துப் பேசிய பழைய காணொளி ஒன்று தற்சமயம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

திமுக ஆட்சி அமைவதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் தமிழகத்தில் நீட் தேர்வு உறுதியாக ரத்து செய்யப்படும்” என்று அவர் பேசியதும், ஆட்சி அமைந்த பிறகு “இன்னும் 7 மாதங்களுக்குள் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று அவர் உறுதியளித்த காட்சிகளும் அந்தப் பழைய வீடியோவில் இடம்பெற்றுள்ளன.‌‌

ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத சூழலில், இந்த வாக்குறுதி வீடியோவை எக்ஸ் தளத்தில் மீண்டும் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து தங்களது கண்டனப் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>

டெல்லி போராட்டங்களின் பின்னணியில் தமிழகத்தில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ள இந்த வீடியோ பதிவு, தற்சமயம் இணையத்தில் ஆயிரக்கணக்கான பார்வைகளுடன் பரவி வருகிறது‌.