டெல்லியில் மாணவர்கள் நடத்திவரும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த சூழலில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரபல இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பதிலை லத்தியைக் கொண்டு கொடுப்பதா?” என்ற வகையில் தனது கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

“>

 

தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வரும் இவரின் இந்த பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது.