தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். அவருடைய கடைசி படமான ஜனநாயகன் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ள நிலையில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்த பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருக்கிறார். தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது தான் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் நடிகர் விஜயின்ரசிகர்கள் மன்றத்தில் பணியாற்றி இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பலர் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் அமைச்சர்கள் பலரும் விஜயின் படத்தை பார்க்க ஆர்வத்துடன்  வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் முகமது பர்வேஷும்  ஜனநாயகன்படத்தின் FDFS பார்த்தார். அவர் தியேட்டரில் படம் பார்க்கும்போதே கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.