தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பின்னர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் திரைப்பயண இறுதிப் படமான ‘ஜனநாயகம்’ இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. பல்வேறு அரசியல் மற்றும் விநியோகப் பிரச்சினைகளைக் கடந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளதால், இன்று காலை முதலே திரையரங்குகளில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, மக்கள் சேவைக்காகத் தனது கலைப்பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்வதாக விஜய் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவர் முதலமைச்சரான பிறகு வெளியாகும் கடைசிப் படம் என்பதால், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படத்தைக் காணும் ஆர்வம் வழக்கத்தை விடப் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.
திருவண்ணாமலை: ஜனநாயகன் படத்தின் ரிலீசை ஒட்டி கேக் வெட்டிய தவெக மாவட்ட செயலாளர் – கத்தி கிடைக்காததால் விஜய் புகைப்படத்தை வைத்தே கேக் வெட்டினார்#SunNews | #Jananayagan | #TVK | #Thiruvannamalai pic.twitter.com/3dfHnv4aHD
— Sun News (@sunnewstamil) July 23, 2026
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை முதலே ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகத்துடன் படத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் எண்ட்ரி மற்றும் தற்போதைய ஆட்சிப் பொறுப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாகப் படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதால், தியேட்டர்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகக் கேக் வெட்டுவதற்குக் கத்தி கிடைக்காததால், அங்கிருந்த முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தையே கத்தியாகப் பயன்படுத்தி அவர் கேக்கை வெட்டினார். தற்பொழுது இது தொடர்பான சுவாரசியமான வீடியோ இணையதளங்களில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
