சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை 560 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,08,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14727 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது‌