நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய ‘சலோ சன்சாத்’ நாடாளுமன்றம் நோக்கிய பேரணி போராட்டத்தின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சாதாரண உடையில்)வந்த நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹனி சிங் தாகர் யார்?
வைரலான அந்த வீடியோவில் மாணவர்களைத் தாக்கிய நபர் டெல்லி காவல்துறை கான்ஸ்டபிளாகப் பணியாற்றும் ‘ஹனி சிங் தாகர்’ என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது தந்தை இறந்ததைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் இவருக்குப் போலீஸ் வேலை கிடைத்ததாகவும், காசியாபாத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்களும் மாணவிகளும் என்று பாராமல் அவர் கண்மூடித்தனமாகத் தாக்கிய விதம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் கண்டனம்:
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிரபல திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “இவர்தான் ஹனி சிங் தாகர்.
நேற்று மாணவர்களைத் தாக்கியவர்களில் இவரும் ஒருவர். இதுபோன்று அத்துமீறும் ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டுங்கள், நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனுராக் காஷ்யப்புடன் நசுருதீன் ஷா, ரத்னா பதக் ஷா மற்றும் சோனாட்சி சின்ஹா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இணையத்தில் வெடித்த விவாதம்:
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வன்முறையைக் கையாண்ட விதம் குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “அவர் சீருடையில் இருக்கிறாரோ இல்லையோ, ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் மீது வன்முறையைக் காட்ட யாருக்கும் உரிமையில்லை.
View this post on Instagram
“>
தவறு செய்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுச் சிறைக்குச் செல்ல வேண்டும்” என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
