இணையவழியில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு மோசடி செய்து வரும் சைபர் குற்றவாளிகள், தற்போது பொதுமக்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சைபர் குற்றவாளிகள் புதுப்புது உத்திகளால் பொதுமக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றனர்.
நம் கண் முன் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டு, நாம் செய்யும் உதவியின் வழியே நமக்கு ஆப்படிக்கும் நிகழ்வுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.]. வைஃபை மற்றும் போலியான செயலிகள் மூலம் ஹேக்கிங் செய்து வந்த கிரிமினல்கள், தற்போது ‘மொபைல் ஹாட்ஸ்பாட்’ பகிர்வு மூலம் பணத்தையும், தனிநபர் தரவுகளையும் திருடும் புதியமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லிங்க்களை க்ளிக் செய்வதன் வழியே ஆரம்பித்த இது, போலியான ஆப்களை இன்ஸ்டால் செய்ய வைத்ததன் வழி தொடர்ந்தது., இதன் அடுத்தகட்டமாக Wi-Fi ஹேக்கிங் எல்லாம் நடந்தன. தற்போது இந்த மோசடி ஹாட்ஸ்பாட் ஷேரிங்கில் வந்து நிற்கிறது. அண்மையில் மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் அவசரத் தேவைக்காக அறியாத நபருக்கு ஹாட்ஸ்பாட் பகிர்ந்த பெண் ஒருவரின் கணக்குகளில் அங்கீகார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் எச்சரிக்க அடைந்த அப்பெண் உடனடியாகத் தனது கடவுச்சொற்களை மாற்றித் தப்பியுள்ளார்.
மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் 50 வயது பெண் ஒருவர் மெட்ரோ டிக்கெட்டை எடுக்க நெட்வொர்க் சரியாகக் கிடைக்காத நிலையில் இப்பெண்ணிடம் ஹாட்ஸ்பாட் கேட்டு நின்றிருக்கிறார். சிறிது நேரத்தில் ஹாட்ஸ்பாட் கொடுத்து உதவி செய்த பெண்ணுக்கு ஆதார் அங்கீகாரம் முயற்சிகள் தோல்வியடைந்ததாக குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது.
பின் தனது செல்பேசியில் இருக்கும் வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றியுள்ளார். அந்நிய நபர்களுக்கு ஹாட்ஸ்பாட் வழங்கும்போது, நமது ஐபி முகவரியைப் பயன்படுத்தி அவர்கள் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், காவல்துறை விசாரணை நேரடியாக நம்மையே வந்து சேரும் என்றும், நமது கணக்குகளை ஹேக் செய்ய வழிவகுக்கும் என்றும் தெரியாதவர்களுக்கு ஹாட்ஸ்பாட் பகிர்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
நாம் ஹாட்ஸ்பாட் கொடுப்பதன் மூலமாக, வேறு ஒரு சாதனத்தின் மூலம் நாம் நமது நெட்வொர்க்கையும் ஐபி முகவரியையும் திருடர்கள் அணுக வழிவகுக்கிறோம்., ஹாட்ஸ்பாட் வாங்கியவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், உங்கள் பெயரிலேயே அது கணக்கு வைக்கப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு நடந்தால், முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது ஐபி முகவரியின் உரிமையாளரான உங்களைத்தான்., ஹாட்ஸ்பாட் வழியாக நமது இணைய செயல்பாடுகளை வேறொருவர் கண்காணிக்க முடியும்.
