கேரளப் பெண்களின் பிரகாசமான சருமம் மற்றும் நீண்ட அடர்த்தியான கூந்தலுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கிய அழகுச் சாதனம் வேறு எதுவுமில்லை, பாரம்பரியமான தேங்காய் எண்ணெய் மட்டுமே! தலை முதல் பாதம் வரை தங்களது அன்றாட அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பில் அவர்கள் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சமையல் தொடங்கி சருமப் பாதுகாப்பு வரை இதன் நன்மைகள் எண்ணற்றவை.

தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்:

உடல் எடை குறைப்பு:

தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள காப்ரிக் அமிலம் மற்றும் லாரிக் அமிலம்  ஆகியவை உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் சீராகப் பராமரிக்க பெரிதும் உதவுகின்றன.

பளபளக்கும் சருமம்:

இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தேங்காய் எண்ணெயைப் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும். மேலும், இது சிறந்ததொரு மேக்கப் ரிமூவராகச் செயல்படுகிறது. (எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது).

நோய் எதிர்ப்புச் சக்தி:

இதில் உள்ள மோனோ லாரின் மற்றும் பல்வேறு அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன், வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கின்றன.

இயற்கையான பாடி லோஷன்:

குளித்து முடித்தவுடன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி கை, கால்கள் மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கவும் இது உதவுகிறது.

முடி பராமரிப்பு:

கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுப்பதில் தேங்காய் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மயிரிழைகளுக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.

காயங்கள் மற்றும் தோல் தொற்றுகள்:

சிறிய காயங்கள் மற்றும் திறந்த புண்களுக்குத் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து வைப்பது பாரம்பரியமான வழதியாகும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பூஞ்சை தொற்றுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.