தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், தனது நடிப்புத் துறையிலிருந்து முழுமையாக விடைபெற்று தற்போது அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள நிலையில், அவரது விடைகொடுக்கும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் தாமதம் காரணமாகச் சில மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்த இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகளவில் முதல் நாளிலேயே சுமார் 80 கோடி ரூபாயைக் குவித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

திரைப்படத்தின் வெற்றி ஒருபுறம் இருக்க, மறுபுறம் திரையுலகை விட்டு நடிகர் விஜய் விலகியிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் பிரபலங்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், விஜயின் தீவிர ரசிகருமான வருண் , ‘ஜனநாயகன்’ படத்தைத் தியெட்டரில் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்டுள்ள பிரத்யேக சமூக வலைதளப் பதிவு இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாகத் தனது சிறு வயது முதலே விஜயின் திரைப்படங்களைக் பார்த்து வளர்ந்ததையும், அவரது சினிமா பயணத்தின் ஒரு பகுதியாகத் தானும் இருந்ததையும் அவர் இந்தப் பதிவில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்யை ‘அண்ணா’ என்று குறிப்பிட்டுள்ள வருண்  ‘காதலுக்கு மரியாதை’ படம் வெளியான காலம் தொட்டே தான் அவரது தீவிர ரசிகர் என்று தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையில் இனிமேல் விஜய் போன்றதொரு மாபெரும் ஆளுமையின் முகம் தெரியாது என்ற ஏக்கத்தைப் பகிர்ந்துள்ள அவர், இந்த அற்புதமான இறுதிப் படத்தைக் கொடுத்துள்ள இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்காகச் சினிமாவிலிருந்து விலகிய விஜய்க்குத் திரையுலகினர் மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவும் அன்பும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.