சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுகளித்த பிறகு வெளியே வந்த நடிகர் விமலிடம், ஊடகவியலாளர்கள் செக் மோசடி வழக்கு தொடர்பான கேள்விகளை எழுப்பினர்.

செய்தியாளர்களின் எதிர்பாராத இந்தக் கேள்தியைக் கேட்டதும் சற்றும் பதற்றமடையாத விமல், “அப்படியா?” என்று ஒற்றைக் கேள்வியுடன் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு எதுவும் தெரியாது, என்னை எல்லாம் தளபதி மாதிரி எல்லாம் அழ வைக்க முடியாது” என்று நக்கல் கலந்த தொனியில் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

“>

 

சினிமா தியேட்டர் வாசலில் நடிகர் விமல் அளித்த அலட்சியமான பதில் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.