திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் தான் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முருகப்பெருமானுக்கு 6 அடி உயரமுள்ள பிரம்மாண்ட வெள்ளி வேலை காணிக்கையாகச் சமர்ப்பித்த அவர், தங்கத் தேரையும் இழுத்துத் தனது வழிபாட்டை நிறைவு செய்தார்.தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, தமிழகக் கோவில்களில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முருகனின் அருளிலிருந்து தப்ப முடியாது என்றும் தண்டனை உறுதி என்றும் எச்சரித்தார்தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ விவகாரத்தில் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்தது அரசின் வன்மத்தைக் காட்டுகிறது என்றும், எச்சரித்து அனுப்பியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
நீட் விலக்கு மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற விவகாரங்களில் அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் எனக் வலியுறுத்திய அவர், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
திருத்தணி முருகப்பெருமானுக்கு பக்தியுடன் 6 அடி உயர வெள்ளி வேலை காணிக்கையாக சமர்ப்பித்தேன்.
முருகப்பெருமானை தரிசித்து, தமிழ்நாடு மக்களின் நலன், வளம், அமைதிக்காக மனமாரப் பிரார்த்தித்தேன்.
முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணையாக இருக்கட்டும்.
.
வெற்றி வேல்! வீர… pic.twitter.com/SkxKZTqeut— Premallatha Vijayakant (@PremallathaDmdk) July 22, 2026
“>
இறுதியாக, விவசாயிகள் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், திரைப்படங்களில்பேசுவதை நிஜ வாழ்க்கையிலும் செய்து காட்டினால் மட்டுமே மக்கள் விஜய்யை உண்மையான ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
