நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் நவம்பர் 11ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகின்றது. இதனை www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலமாகவும் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.