திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன செல்போன்களை மீட்பதற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் குற்றப்பிரிவு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறை கடந்த மே 17ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதள முகப்பில் CEIR என்ற இணையதளத்தை பொதுமக்கள் தங்களுடைய தொலைந்து மற்றும் திருட்டுப்போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

இதன் மூலமாக திருட்டுப் போன செல்போன் ஐ எம் இ ஐ எண் முடக்க உடனடியாக காவல்துறையினர் வலியுறுத்த முடியும். இதனால் 24 மணி நேரத்தில் அந்த எண் முடக்கப்படும். இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்களுடைய தொலைந்து மற்றும் திருட்டு போல கைபேசி குறித்த தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும். அதேசமயம் 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் உங்களது தொலைபேசியில் ஐ எம் இ ஐ எண் குறித்த உண்மை தன்மையை அறியலாம்.