தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திமுக-வுடன் நகமும் சதையுமாகப் பயணித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அந்த மெகா கூட்டணியை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வகுப்புவாத சக்திகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையுடன், காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர விஜய்யுடன் கைகோர்ப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

திமுக-வின் நீண்டகால நட்பு முறிந்ததும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவுக்கரம் நீட்டியதும் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் விஜய்யின் பலம் அதிகரித்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது.