சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக மீது மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாகவும், இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் சாடியுள்ளார்.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், இந்த வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.