நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வனத்துறை வாகனத்தில் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது காட்டில் நின்ற யானையை சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.

சற்று தொலைவில் வன ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர் இதனைப் பார்த்த யானை திடீரென வாகனத்தை தாக்க ஓடி வந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனே வன ஊழியர்கள் வாகனத்தை வேகமாக ஓட்ட தொடங்கினர். சிறிது தூரம் ஓடிவந்த யானை பின்னர் திரும்பி சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.