பெங்களூருவைச் சேர்ந்த சாய் ஹர்ஷ் என்பவர் ஜோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்தபோது, அந்த உணவை வழங்க வந்த நபர் மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டு நெகிழ்ந்து போனார். அந்த நபர் தனது மூன்று சக்கர வாகனத்தில் வந்து உணவு வழங்கிய அந்தத் தருணத்தில், அவரது விடாமுயற்சியையும் உழைப்பையும் சாய் ஹர்ஷ் பாராட்டினார்.

மேலும், அவரிடம் அன்பாகவும் மரியாதையுடனும் உரையாடிய ஹர்ஷ், “மக்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த நபர், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தன்னிடம் அன்பாகவே நடந்துகொள்வதாகப் புன்னகையுடன் பதிலளித்தார்.

இந்த உரையாடலை ஹர்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நபரின் கடின உழைப்பைப் பாராட்டி அவருக்கு ₹100 டிப்ஸாக வழங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Sai Harsha (@harsha_._pov)

“>

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பணத்தை விட ஒருவரை மரியாதையாக ‘சார்’ என்று அழைப்பதும், அவரது உழைப்பை அங்கீகரிப்பதும் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பதை இந்த வீடியோ பலருக்கு உணர்த்தியுள்ளது.

உணவு ஆர்டர் செய்ததை விட, இந்தச் சந்திப்பு தமக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக அமைந்ததாக ஹர்ஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.