அரசு மருத்துவமனைகளில் நிலவும் அலட்சியமான நிர்வாகப் போக்கைக் காட்டும் ஒரு பகீர் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை பில்லிங் கவுண்டரில் பணியில் இருக்க வேண்டிய ஊழியர் ஒருவர், தன் கடமையை மறந்து காதலியுடன் வீடியோ காலில் சிரித்துப் பேசி அரட்டையடித்துக் கொண்டிருந்த வேளையில், வெளியே அவசர சிகிச்சைக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தவித்துப் போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பில் கவுண்டரில் அமர்ந்திருந்த அந்த ஊழியர் பொதுமக்களின் அவசரத் தேவையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் காதலியுடன் வீடியோ காலில் நேரத்தைச் செலவிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைய, அவரை உடனடியாக அவசரப் பிரிவுக்கு மாற்ற மருத்துவப் பில் தேவைப்பட்டுள்ளது.
கவுண்டருக்கு வெளியே நின்றிருந்த உறவினர்கள் “தயவுசெய்து சீக்கிரம் பில் போட்டுத் தாருங்கள், அவசரம்” என்று கதறியும், அந்த ஊழியர் அதைக் கண்டுகொள்ளாமல் தன் காதலியுடனான உரையாடலிலேயே தீவிரமாக இருந்துள்ளார்.
உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையில் நடக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் ஏழை எளிய மக்கள் படும் அவதி கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ये हालात हैं सरकारी अस्पताल के– बिलिंग काउंटर पर बैठा कर्मचारी अपना काम छोड़कर गर्लफ्रेंड से वीडियो कॉल पर मस्ती कर रहा है। मुस्कुरा रहा है, बातें कर रहा है… और खिड़की के बाहर लोग परेशान खड़े हैं।
एक प्रेग्नेंट महिला की हालत गंभीर है। इमरजेंसी वार्ड में ले जाने के लिए पर्चा और… pic.twitter.com/011zS8a509
— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 7, 2026
“>
மருத்துவச் சேவையில் அலட்சியமாக நடந்து கொள்ளும் இதுபோன்ற பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுத்து உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
