டெல்லியின் பரபரப்பான சாலையில், ஒரு இளம்பெண் தனது தாயின் கண்முன்னாலேயே காதலனுடன் ஓடிச் செல்லும் அதிர்ச்சிகரமான காட்சி எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. சாலையில் நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் இதைப் படம்பிடித்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் சாலையில் ஓடுவதும், அவரைத் தடுக்க முடியாமல் அந்தத் தாய் தவித்தபடி பின்னாடியே ஓடிச் செல்வதும் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
🚨SHOCKING
Daughter runs away with boyfriend right infront of mother’s eye at market in Delhi. pic.twitter.com/rRfvRSEMHX
— Amitabh Chaudhary (@MithilaWaala) December 16, 2025
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்தத் தாயின் நிலையை நினைத்து வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆசையாய் வளர்த்த மகள், இப்படி நடுரோட்டில் தன்னைத் தவிக்கவிட்டுச் செல்வதைக் கண்டு அந்தத் தாய் நிலைகுலைந்து போனது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
