இமாச்சலப் பிரதேச மாநிலம் டல்ஹௌசியில் உள்ள மலைப்பாதையில், சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி உருண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் பிரேக் (Brake) செயலிழந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சாலையில் வாகனம் வேகமாகப் பின்னோக்கி உருண்டதைக் கண்டு, உள்ளே இருந்த பயணிகள் தங்கள் உயிரைக் காக்க ஓடும் வாகனத்திலிருந்து வெளியே குதித்தனர்.



அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். வாகனம் உருண்டு வந்த பாதையில் மற்ற வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.