சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், திருமணமான பெண் ஒருவர் தனது கணவருடன் இருக்கும்போதே, அங்கிருந்த ஒரு பிரபல ட்விட்ச் ஸ்ட்ரீமரை (Twitch Streamer) தனக்குத் திருமணம் செய்யப் பிடித்துள்ளதாகக் கூறுகிறார். அந்தப் பெண் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. பெண்ணின் இந்தத் திடீர் பேச்சைக் கேட்டு அந்த ஸ்ட்ரீமர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

​அருகிலேயே இருந்த அந்தப் பெண்ணின் கணவர், இதைக் கேட்டு மிகுந்த அவமானத்திலும் வேதனையிலும் தலையைக் குனிந்தபடி அமைதியாக நின்றிருந்தார். இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலானதை அடுத்து, “சொந்தக் கணவர் முன்னிலையிலேயே இப்படிப் பேசுவது எவ்வளவு பெரிய மனவேதனையை அவருக்குக் கொடுத்திருக்கும்” என்று நெட்டிசன்கள் அந்த நபருக்கு ஆதரவாகவும், பெண்ணின் செயலைக் கண்டித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.