டிக்கெட் இல்லாமல் ரயிலின் முன்பதிவு பெட்டிகளில் (Reserved Coaches) பயணிகள் அத்துமீறி நுழைவது தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ஒரு பயணிக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் (TTE) இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது.



ரயில்வே விதிமுறைகளின்படி, ஆவணங்கள் இல்லாத பயணிகளை அபராதம் விதித்து இறக்கிவிட வேண்டுமே தவிர, அவர்கள் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்த அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. “பயணிகளின் அத்துமீறல் தவறுதான் என்றாலும், ஒரு அரசு ஊழியரே சட்டம் கையில் எடுப்பது முறையா?” என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், நெரிசலைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஊழியர்களின் மன அழுத்தத்தையும் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.