திமுக அரசுக்கு மாற்றாகவே மக்கள் தவெக கட்சிக்கு வாய்ப்பளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போதைய புதிய அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் திமுகவுக்கு சரியான மாற்றாகத்தான் மக்கள் தவெக அரசுக்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் ஊழலுக்கு எதிராக மிகவும் வேகமாகச் செயல்பட்ட இந்த புதிய அரசு, தற்போது மிகவும் மெத்தனமாகவும் மெதுவாகவும் செயல்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்த அவர், “தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களைச் சிறப்பு நீதிமன்றம் மூலம் உடனடியாகத் தண்டிக்கும் அதிகாரத்தை லோக்அயுக்தா அமைப்பிற்கு வழங்க வேண்டும். இதற்காகத் தேவையான சட்டத்திருத்தங்களை அரசு உடனடியாக மேற்கொண்டு ஊழலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பாமக தலைவர் அன்புமணியின் இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
