சண்டையின்போது ஆத்திரத்தில் ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாக கருத முடியாது என்று கேரளா உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஆண் நண்பர் கோபத்தில் ‘செத்துப் போ’ எனக் கூறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தற்கொலைக்குத் தூண்டுதல் என்பது ஒருவரைத் திட்டமிட்டு அந்த முடிவை எடுக்க வைப்பதாகும் என்றும், வெறும் கோபத்தில் பேசும் வார்த்தைகள் அதற்குச் சமமாகாது என்றும் கூறி, குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்தார்.