பிரதமர் மோடி இன்று கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்ததால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 820 ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 300 ரூபாய் மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் 520 ரூபாய்க்கு கிடைக்க உள்ளது. நேற்று வரை சிலிண்டர் விலை 920 ரூபாயாகவும், உஜ்வாலா திட்ட சிலிண்டர் விலை 620 ரூபாய் ஆகவும் இருந்தது. வணிக சிலிண்டர் விலை 1960 ரூபாயாக நீடிக்கிறது.