அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து இந்திய குடியரசு கட்சியும் இணைந்துள்ளது. இபிஎஸ்ஐ சந்தித்து கட்சியின் மாநில தலைவர் தமிழரசன் கூட்டணியை உறுதி செய்தார். அக்கட்சிக்கு அதிமுக ஒரு இடம் அளிக்கக்கூடும். இல்லையென்றால் அடுத்த சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு இரண்டு இடங்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படும்.