2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களில் இன்று மார்ச் 9ம் தேதி  காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகம் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.