ஹாரி பாட்டர் கதையின் மூலம் உலக புகழ் பெற்ற ஜேகே ரௌலிங். இந்த இடத்தை பிடிக்க தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியது இருந்தது. தனது 17 வயதில் கல்லூரிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஜே.கே ரௌலிங் அவருடைய 25 வயதில் நோய் காரணமாக தாய் இறந்து போனார். தனது 26 ஆம் வயதில் கருச்சிதைவுக்கு உள்ளானார்.

27 வயதில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவருடைய கணவன் ஆர்கே ரவுளின் அடித்து உதைப்பதையே வேலையாக கொண்டிருந்தான். இதற்கிடையே இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.   28 வயதில் ஜேகே ரௌலிங் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அவர் கடும் மன அழுத்தத்திலிருந்து மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

29 ஆம் வயதில் தன்னுடைய குழந்தையுடன் ஆதரவற்றோருக்கான சமூக நல கூட்டத்தில் தஞ்சமடைந்தார். 30  வயதில் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்த தருணத்தில் அவரது மனம் மாறியது. தனக்கு பிடித்த துறையில் வேலை பார்க்க முடிவு செய்தார். முழுநேர எழுத்தாளராக ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.

31ஆம் வயதில் தன்னுடைய முதல் புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகம் தான் உலக புகழ் பெற்ற ஹாரி பாட்டர் 35 வயதில் ஹாரிபட்டரின் 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த  ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் என்ற விருதையும் பெற்றார். 42 வயதில் அவர் எழுதிய ஒரு ஹாரி பாட்டர் புத்தகம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 11 மில்லியன் அளவிற்கு விற்று தீர்ந்தது.  இன்று ஹாரி பட்டார் படத்தின் பான் மதிப்பு மட்டும் 11 மில்லியன்கள் ஆகும்.