இரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உணவளிப்பதோ அல்லது அவர்களைத் தூங்க வைப்பதோ பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக 2-ஏசி அல்லது 3-ஏசி பெட்டிகளில் போதிய தனிமை கிடைக்காதது தாய்மார்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.
இதற்குத் தீர்வாக, இரயிலில் வழங்கப்படும் போர்வையை வைத்தே எளிமையான ஒரு ‘லைஃப் ஹேக்’ செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் உங்களது இருக்கையை ஒரு சிறிய தனி அறையாக மாற்றி, குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வசதியான சூழலை உருவாக்க முடியும்.
இந்த முறையில், போர்வையின் ஒரு முனையை இருக்கைக்கு மேலே உள்ள கம்பியிலும், மறுமுனையை எதிர் பக்கத்தில் உள்ள லாக்கிலும் முடிச்சாகக் கட்ட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு திரைச்சீலை போன்ற அமைப்பு உருவாகி, தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தைகள் தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்கும் ஏதுவாக அமைகிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை பார்த்த பல தாய்மார்கள், இது பயணத்தை மிகவும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதாக நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
